Saturday, June 21, 2008

மேலும் சில முத்தங்கள்





மணல் கலைத்து அந்த பாலையில்
தனிமையோடு க‌ட‌க்கையில்
அன்பாய் ஒரு கை தோள்படர
திரும்பி கட்டிக்கொண்டு
முத்தமிட்டேன் உன் நினைவுகளை

##

வேக‌த்தில் அறைந்துவிட்டு
மன்னித்துவிடென‌ முகம்
முழுவதும் முத்தமிடுகின்றாய்
ம்ம் பரவாயில்லை
மீண்டும் ஒரு முறை அறை

##

மென்காற்று உன் இதழ்களை
மெல்ல தீண்டும் போதும்
மேக‌துளிகள் உன் உட‌லை
முத்தமிட்டு உடைக்கும் போதும்
நான் இயற்கையை ரசிப்பதில்லை

##

நம் விர‌ல் நுனிக‌ள் சிறிதாக
மோதிகொண்டு முத்தமிட்ட‌ போது
எழுந்த‌ அதிர்வலைகள்
மடு உடைத்து மகரந்தம் தெறித்து
உல‌க‌ம் ப‌ர‌வ‌ க‌ண்டாயா??

##

தனித்த மாலை ஒன்றில்
துள்ளி உதிரும் சிவந்தமஞ்சள்
நிற இலைகள் சில என் கன்னத்தை உரசி
கீழே விழும் போது எனக்கான
உன் முத்தமொன்றை விட்டு செல்கின்றன‌

5 comments:

Thamizhmaangani said...

நல்லா இருக்கு கவிதை.

//வேக‌த்தில் அறைந்துவிட்டு
மன்னித்துவிடென‌ முகம்
முழுவதும் முத்தமிடுகின்றாய்!
ம்ம் பரவாயில்லை
மீண்டும் ஒரு முறை அறை!//

சூப்பர்ர்ர்ர் தல! கலக்கலா இருக்கு.

இராஜராஜன் said...

வணக்கம்
கவிதை முழுவதும் ஒரு தனிமை தெரிகிறது....

தனிமைதானே எல்லோரும் விரும்புறதும்

நல்லா இருக்கு

நன்றி

rahini said...

arumaiyaana kavithai

Gokulan said...

டேய் குட்டி,

//மணல் கலைத்து அந்த பாலையில்
தனிமையோடு க‌ட‌க்கையில்
அன்பாய் ஒரு கை தோள்படர
திரும்பி கட்டிக்கொண்டு
முத்தமிட்டேன் உன் நினைவுகளை!
//

சூப்பரோ சுப்பர்...

//வேக‌த்தில் அறைந்துவிட்டு
மன்னித்துவிடென‌ முகம்
முழுவதும் முத்தமிடுகின்றாய்!
ம்ம் பரவாயில்லை
மீண்டும் ஒரு முறை அறை!

//

கவிதை இதமாய் வலிக்கிறது..

//

மென்காற்று உன் இதழ்களை
மெல்ல தீண்டும் போதும்
மேக‌துளிகள் உன் உட‌லை
முத்தமிட்டு உடைக்கும் போதும்
நான் இயற்கையை ரசிப்பதில்லை!

//

அட்டகாசம்..

//
நம் விர‌ல் நுனிக‌ள் சிறிதாக
மோதிகொண்டு முத்தமிட்ட‌ போது
எழுந்த‌ அதிர்வலைகள்
மடு உடைத்து மகரந்தம் தெறித்து
உல‌க‌ம் ப‌ர‌வ‌ க‌ண்டாயா??
//

வாவ்..

//
தனித்த மாலை ஒன்றில்
துள்ளி உதிரும் சிவந்தமஞ்சள்
நிற இலைகள் சில என் கன்னத்தை உரசி
கீழே விழும் போது எனக்கான
உன் முத்தமொன்றை விட்டு செல்கின்றன‌

//

இதமாய் இருக்கு..

குட்டி, இப்படியெல்லாம் நானும் எழுத வேண்டுமென்ற ஆர்வதை தூண்டுகின்றன இந்த கவிதைகள்!!

கலக்கல்..

mohammed said...

நுகரும் போதே பறக்க வைக்கும்
கவிதை மலர்கள் இவை
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :))