Wednesday, July 30, 2008

நானும் ம‌ழையும்


























இந்த மழைக் காலங்களில்
தூரத்தில் தெரிகின்ற‌து மழை

அருகில் வர‌லாம்
காற்றைப் பரப்பி காய்ந்தத் துணிகளை
பறக்கவிட்டு தயார்படுத்தலாம்
மண் வாசனையை அறைக்குள் நுழைக்கலாம்
கூரைகளிலிருந்து நிலத்தில் கொட்டலாம்
இலைகளில் வழிந்து சிதறலாம்
எல்லா திசைகளிலும் வீதியை நிரப்பலாம்
ஒரு குடைக்குள் அடையும்
இரு நண்பர்களின் தருணத்தை இனிதாக்கலாம்
காகித கப்பலுடன் காத்திருக்கும்
என் மகளின் கனவுகளை மகிழ்விக்கலாம்
எனை சிறிது நனைத்து
ஆறுதலளிக்கலாம்
உன் புதிய‌ செய்தியை சுமந்தவாறும்
வண்ணங்கள் தெளித்தவாறும்
வாசல் வரும் வண்ணத்துப்பூச்சியுடன் சேர்ந்து
என் மனமுடைக்கலாம்

ம்ம்... காத்திருக்கின்றேன்
மழைக்கும்
நீ அனுப்பாத‌ செய்திக்கும்

2 comments:

M.Saravana Kumar said...

நீங்க எதிர்பார்க்கிற செய்தி நிச்சயம் வரும் நண்பரே..
:)

கூடவே மழையும்..

Aruna said...

அந்த செய்தி வரும் நாளில் மழையும் வரும்...
அன்புடன் அருணா