Tuesday, September 16, 2008

.............


ச‌மாதான‌மில்லாம‌ல்
ப‌சித்துக் கொண்டிருக்கின்ற‌து வ‌யிறு
எங்கோ நிற‌மில்லாக் காட்டுக்குள்
ம‌ர‌மொன்று உதிர்த்திருக்க‌க்கூடும்
ப‌ழுத்தக் க‌னியொன்றை

#

ஆட்சேபனைகள் இல்லாத ஒருநாளில்
சூரிய‌னை கைநீட்டிப் ப‌ரித்து
விழுங்கிவிட‌ப் போகின்றேன்
இனி நீங்க‌ள் பொழுதுகளைப் பிரித்து
காலம் ந‌க‌ர்த்துவ‌து க‌டின‌மே!

#

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன்

3 comments:

Saravana Kumar MSK said...

ரொம்ப நல்லா இருக்கு செல்வா..
:))

Lakshmi Sahambari said...

ஆட்சேபனைகள் இல்லாத ஒருநாளில்
சூரிய‌னை கைநீட்டிப் ப‌ரித்து
விழுங்கிவிட‌ப் போகின்றேன்
இனி நீங்க‌ள் பொழுதுகளைப் பிரித்து
காலம் ந‌க‌ர்த்துவ‌து க‌டின‌மே!

//////////

nalla varigal !

Aruna said...

//காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் //

இந்த வரிகள் மனதோடு ஒட்டிக் கொள்கிறது......அழகிய கவிதை குட்டிச் செல்வன்...
அன்புடன் அருணா