Friday, February 20, 2009

ஒரு பொழுது

பற்றுதலை விடுத்துப்
பறக்க முற்படும் பறவை
உதிர்க்கச்செய்கிறது
சில பழுத்த இலைகளை

எதிர்பார்த்திருந்தும்
பெய்யவேயில்லை மழை
இன்றும்கூட‌

அவிழுமென் வினாக்களுக்கு
பதில்கூற‌ முடியாமல்
விலகிக் கொள்கின்றன
எல்லாப் பொழுதுகளும்

வ‌ராண்டாவில் மிதந்து
அலையும் வெறுமைக‌ள்
என்னிலும் முளைவிட
அனுமதிக்காம‌ல்
விரும்பிய‌படியே
காகித்தில் எதையோ
கிறுக்கியவாறு அம‌ர்ந்திருகிறேன்
முன் எப்போதுமில்லாத‌வித‌மாக

சண்டையிட்டப் பின்னும்
நீ வந்து நீட்டும் இந்த
தேனீர்க்கோப்பையை
பெற்றுகொள்வ‌தில்
ம‌றுப்பேதுமில்லை என‌க்கு

கோடைகாலத்து மழையாய்
சட்டென‌ வியப்பூட்டவேச் செய்கிற‌து
என்றாவ‌து வெளிப்ப‌டும்
உனதிந்த‌ அக்கறைகள்

2 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

//சண்டையிட்ட பின்னும்
நீ வந்து நீட்டும் இந்த
தேனீர்க்கோப்பையை
பெற்றுக் கொள்வ‌தில்
ம‌றுப்பேதுமில்லை என‌க்கு //

அழகான வரிகளில் அழகான ஊடலைக் காண்கிறேன்...!

அன்புடன் அருணா said...

//கோடைகாலத்து மழையாய்
சட்டென‌ வியப்பூட்டவேச் செய்கிற‌து
என்றாவ‌து வெளிப்ப‌டும்
உனதிந்த‌ அக்கறைகள்//

அழகான வரிகள்...
அன்புடன் அருணா