Friday, April 3, 2009

...............

மௌனமாக இருந்துவிட்டேன்
தொடுகையில் உதிர்ந்த
இளம் மொட்டிடம் சொல்ல
யாதொரு சமாதானங்களுமில்லை
என்னிடம்.

##

தனிமை என்பது
நீயற்ற வேளைகளிலல்ல
நானற்ற வேளைகளில் மட்டுமே.

##

ஒரு சிறு கல் கொண்டு
மிகுந்த‌ ந‌ம்பிக்கையுட‌ன்
க‌வ‌ணில் குறிவைக்கிறேன்
நிலவை உடைத்தெறிய‌.

7 comments:

rajan RADHAMANALAN said...

//மௌனமாக இருந்துவிட்டேன்
தொடுகையில் உதிர்ந்த
இளம் மொட்டிடம் சொல்ல
யாதொரு சமாதானங்களுமில்லை
என்னிடம்.//


simply awesome... rjn radhamanalan

ச.முத்துவேல் said...

ரொம்ப நல்லாயிருக்குதுங்க.(எதுவும் இதழ்களுக்கு அனுப்பினீர்களா?பிரசுர விவரம் எதுவும் இல்லையே. இவை நிச்சயம் பிரசுரம் பெறும் தகுதியுடையவை என்பதை நான் சொல்லி, நீங்கள் அறிய வேண்டியிருக்காது)

அன்புடன் அருணா said...

//ஒரு சிறு கல் கொண்டு
மிகுந்த‌ ந‌ம்பிக்கையுட‌ன்
க‌வ‌ணில் குறிவைக்கிறேன்
நிலவை உடைத்தெறிய‌.//

Fantastic!!!!எப்பிடிப்பா இப்பிடில்லாம்???
அன்புடன் அருணா

kartin said...

selva...

with the 1st one..
u stand apart!!

Divya said...

Amazing!!

\\தனிமை என்பது
நீயற்ற வேளைகளிலல்ல
நானற்ற வேளைகளில் மட்டுமே.\

Nice lines !

Elango said...

//ஒரு சிறு கல் கொண்டு
மிகுந்த‌ ந‌ம்பிக்கையுட‌ன்
க‌வ‌ணில் குறிவைக்கிறேன்
நிலவை உடைத்தெறிய‌//

இனி நிலவை அண்ணாந்து பார்க்கும் தருணமெல்லாம்..
கவனத்திற்கு வரப்போகிறது உங்கள் கவணும் அதில் பொருந்தும் கல்லும்..
( அற்புதம்..!)

People call me "Paul"... said...

"மௌனமாக இருந்துவிட்டேன்
தொடுகையில் உதிர்ந்த
இளம் மொட்டிடம் சொல்ல
யாதொரு சமாதானங்களுமில்லை
என்னிடம்."

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் நான்.. அருமை...