Tuesday, May 19, 2009

....................

தட்டுங்கள் திறக்கப்படுமென்றார்கள்
முடிந்தவரைத் தட்டினேன்
திறக்கப்படவில்லை.
உடைத்து விட்டேன்.

##

திருத்தி எழுதிக்கொள்ளுங்கள்
இங்கு எல்லா உயிர்களுக்கான மதிப்பும்
ஒன்றல்ல.

##

கல் பட்டு விரியும்
குளத்தின் நீர் வளையங்களை போல
மிக லேசாக இருக்கிறதென் மனம்
உன்னொரு மௌனத்தில்
உடைந்து நீள‌வும்
உன் குறுஞ்சிரிப்பொன்றில்
இயல்பு மீளவும்.

- நன்றி உயிரோசை

##

எழுதாமல் மறந்து போன
மிக நல்ல கவிதை போல
ஒரு நாள் இறந்துப்போவேன்
யாருக்கும் என்னை வெளிப்படுத்தாமல்.

3 comments:

கார்த்திகா said...

Different colors than previous poems. :)

Gowripriya said...

உன்னொரு மௌனத்தில்
உடைந்து நீள‌வும்
உன் குறுஞ்சிரிப்பொன்றில்
இயல்பு மீளவும்.

good :)

உயிரோடை said...

//கல் பட்டு விரியும்
குளத்தின் நீர் வளையங்களை போல
மிக லேசாக இருக்கிறதென் மனம்
உன்னொரு மௌனத்தில்
உடைந்து நீள‌வும்
உன் குறுஞ்சிரிப்பொன்றில்
இயல்பு மீளவும். //

அழகுகான ஒப்பீடு.

உன் கல் பட்டு உடைந்தது கண்ணாடி குளம் என்பது கல்யாண்ஜியின் கவிதை.