Tuesday, June 30, 2009

............

தொடர்ந்து ஒலிக்கும்
உனது நான்காவது அழைப்பையும்
துண்டிக்கின்றேன்
பேச இனி என்ன இருகின்றது
உனக்குமெனக்குமிடையில்
நைந்துபோன சில‌ மௌனங்களைத் தவிர.

2 comments:

நேசமித்ரன் said...

ஒவ்வொருமுறை உனது அழைப்பை துண்டிக்கும் போதும்
கிழித்தெறிகிறேன் ஆயிரம் முறை அடித்தெழுதியதொரு கவிதைத்தாளை
மறுதலிக்கப் பெறும் பிரியத்தை
எதிர் கொள்வதை விட மகத்தானது மரணம்

என்று இந்த கவிதையை முடிக்கத்தொன்றுகிறது நளன்

அற்புதமான வெளிபாடு !

உயிரோடை said...

//நைந்து போன மௌனம்//

அருமையான சொல்லாடல்.

நிறைய எழுதுங்கள்