Thursday, July 23, 2009

தேன்

பல கோடி மலர்களில்
அலைந்து திரிந்து
பல ஆயிரம் தேனீக்கள்
சிறுக சிறுக சேகரித்த உழைப்பின் பல‌னை
சட்டென முழுவ‌தும் அப‌க‌ரித்துக்கொள்வ‌தைவிட‌
வேறென்ன பெரிய அபத்தம் இருந்துவிட‌ப்போகிற‌து?

2 comments:

யாத்ரா said...

உண்மை தான் நளன். எவ்வளவு பெரிய சுரண்டல் இல்லையா, எப்படி இப்படி பலவற்றை பிரக்ஞையின்றி அனாயசமாக செய்து வருகிறோம்.

நேசமித்ரன் said...

ஒரு வாசனைத் திரவிய புட்டியில்
எத்தனை மலர்களின் உதிரம்
ஒரு பட்டுச் சீலையில்
எத்தனை வண்ணத்துப் பூச்சிகளின் சடலம்
ஒரு கவளச் சோற்றில் எத்தனை
தானியம்

நிறையக் கேள்விகள் நளன்

கவிதை அருமை