Wednesday, August 26, 2009

........

அப்படி என்ன பெரிதாக வாழ்ந்துவிடப்போகிறீர்கள்
எவறொருவருக்கும் உதவாமல்.

##

என்னைவிட
ஆழ்ந்து அடர்ந்து அழுகிறது மழை.
ஏதேனும் காரணமிருக்கலாம்.

##

யாவும் சுயமாகிப் போனபின்
நீங்கள் செய்வதிலென்ன சரி
அவர்கள் செய்வதில்தானென்ன தவறு?

##

த‌ரையில் துடி துடித்த‌ மீனை
கையில் அள்ளியெடுத்து நீரில் விட‌
நீந்தி மறைகிறது இலகுவாக‌.
யாருக்குத் தெரியும்
அதுவும் முய‌ன்றிருக்க‌லாம்.
த‌ற்கொலைக்கு.

##

வரையறைகளை மாற்றுவதில்
தவறொன்றுமில்லைதான்.
உண்மை ஒருவரின் மனமுடையச்செய்யும் போதும்
பொய்மை பலரை மகிழச்செய்யும் போதும்.

4 comments:

நட்புடன் ஜமால் said...

யாருக்குத் தெரியும்
அதுவும் முய‌ன்றிருக்க‌லாம்.
த‌ற்கொலைக்கு.]]

வித்தியாசப்பார்வை ...

நேசமித்ரன் said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

மண்குதிரை said...

ellaam arumai nanba

ரௌத்ரன் said...

//யாவும் சுயமாகிப் போனபின்
நீங்கள் செய்வதிலென்ன சரி
அவர்கள் செய்வதில்தானென்ன தவறு?//

இப்பிடி கூடவா? அட..அட..அடடா :)