Monday, September 7, 2009

இர‌ண்டாம் வ‌குப்பு ஈ வ‌ழிப்போக்க‌ன்

மிச்சமின்றி
அழுதுமுடித்த ஒரு மாலை வேளையில்
க‌ட‌ற்க‌ரையிலிருந்து விடைபெறுகிறேன்
நகர்ந்து பேருந்தில்
க‌ச‌ங்கும் நெரிச‌ல்க‌ளினூடே ஏறுகையில்
ஒரு இருக்கை கிடைத்துவிட்ட‌து எனக்கேவென்று
அம‌ர்ந்துகொண்டேன்
அருகே சன்னலோரம்
வேடிக்கை பார்த்தவாறு அம‌ர்ந்திருந்தான்
சிறு பொடியன் ஒருவன்
பார்கையில் திரும்பி மிக‌ அழ‌காகப் புன்ன‌கைத்தான்
தனது ப‌ழுப்புநிறப் பிர‌காச‌மான‌ விழிகளில்
நானும் மெல்லிய கேவலினூடேப் புன்ன‌கைத்தேன்.
ஏதோ நினைவுகள் பெருக
அடங்காது வழியும் கண்ணீர்த்துளிகளை
விரல் அழுத்தித் துடைத்தப்பின்
சற்று அமைதியாகி பெய‌ரென்னவென்றேன்
அக்த‌ர் ப‌ர்வேஸ் என்றான்
தான் இரண்டாம் வகுப்பு ஈ படிப்பதாகவும்
புதுக்கோட்டையிலிருந்து
பாட்டி வீட்டிற்கு வ‌ந்திருப்ப‌தாக‌வும்
கேட்காம‌லேயே சொன்னான்
மேலும் க‌ட‌ற்க‌ரையில்
பாட்டி வாங்கி த‌ந்ததென‌ பொம்மையொன்றை
என‌க்கு காட்டினான்
ஊதாநிற‌ உடைய‌னிந்த அது
புன்ன‌கைத்த‌வாறே எனைப் பார்த்த‌து
இன்னும் பேச்சுக்கொடுக்கையில்
அழகாய்ப் பேசிக்கொண்டேயிருந்தான்.
அவனது மழலை மொழியில்
ம‌ன‌ம் சற்றே லேசாகி இருந்த‌து.
சிறிது நேரத்தில் கேள்விகளை அவன் ஆரம்பிக்க
நான் பதிலளித்தபடி இருந்தேன்.
இதற்கிடையே
ஈர‌ச்சாலையின் மஞ்சள் தெருவிள‌க்கொளியில்
இலக்கை நோக்கி விரைந்த‌ப‌டி இருந்தது எங்களின் அந்தப் பேருந்து.
ஒரு தருணத்தில்
ஏன் அழுதீர்க‌ள்
என மெல்ல கேட்ட‌வ‌னுக்கு பதிலென்ன கூற‌‌?
மனம் கனத்து மௌனமாகிவிட்டேன்.

அழுவதற்கான காரண‌ங்கள்
குழந்தைகளைப் போல
ப‌சிப்ப‌த‌ற்கும்
ப‌க்க‌த்தில் யாரும் இல்லாத‌ற்கும் ம‌ட்டும் இருந்திருந்தால்
வாழ்க்கை எவ்வ‌ள‌வு நன்றாக‌ இருந்திருக்குமென‌
முணுமுணுத்த‌வாறே வீடு திரும்பினேன்.

- நன்றி உயிரோசை

8 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு நளன்.வரிவரியாக சிலாகிக்க விருப்பம்.கவிதையின் அமைதி கெடும்.

நேசமித்ரன் said...

\\பா.ராஜாராம் said...
ரொம்ப நல்லா இருக்கு நளன்.வரிவரியாக சிலாகிக்க விருப்பம்.கவிதையின் அமைதி கெடும்.

7 September, 2009 11:07 PM
\\

repeated

ரொம்ப நல்லா இருக்கு !!!

Ramki... said...

Superb Selva.. :)

ரௌத்ரன் said...

காரணம் இல்லாத அழுகையும்...
காரணம் இல்லாத சிரிப்பும்...
எப்பொழுதும் எல்லோருக்கும் சாத்தியமில்லை...உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது :)

divya said...

Hey Selva..... Really an awesome read... Great Going !!!!

மண்குதிரை said...

nekizhvaa irukku nalan

கதிரவன் said...

நல்லா இருக்குது நளன்

தியாவின் பேனா said...

ரொம்ப நல்லா இருக்கு