Monday, December 14, 2009

அவ‌ர்க‌ளுக்கு தெரியாது

கண்ட‌வுடனே புறக்குறைகளைச் சுட்டும்
அற்பமனிதர்களைக் கடந்துப்போகையில்
ஒரு சலனமும் இருப்பதில்லை

அவ‌ர்க‌ளால் என‌க்கு எவ்விதப் பயனுமில்லை
அவ‌ர்க‌ளுக்காக‌ ஒரு புன்ன‌கையைச்
செல‌விடுவ‌தில் கூட‌ என‌க்கு விருப்பமேதுமில்லை

அவ‌ர்க‌ளிட‌ம் பேசுவ‌தைவிட‌
சும்மாவே இருக்க‌லாம் என்ப‌துபோன்றதான
என் ம‌ன‌நிலையை மாற்றியமைத்த‌து
அவ‌ர்க‌ளின் வ‌ஞ்ச‌க‌மானப் பேச்சுக்கள்தானே

அவ‌ர்க‌ளுக்கென்னத் தெரியும்
எஸ‌ன்சிய‌ல் ட்ரெம‌ர் வியாதியைப் ப‌ற்றியோ
சின்ன‌ஞ்சிறு வ‌ய‌தில்
உட‌லெங்கும் சூடிட‌ப்ப‌ட்ட‌தையோ
யாருமில்லாத தனியறையில் அழுதிருக்கையில்
ஒரு பிரிய‌மான‌ தொடுத‌லுகாக‌ ஏங்கிய‌தையோ

என்னத் தெரியும் அவ‌ர்க‌ளுக்கு

அவ‌ர்க‌ளால் என‌க்கு எவ்விதப் ப‌ய‌ன‌முமில்லை
அவ‌ர்க‌ளுக்காக‌ ஒரு புன்ன‌கையை
செல‌விடுவ‌தில் கூட‌ என‌க்கு விருப்பமேதுமில்லை.

4 comments:

யாத்ரா said...

நளன் என்ன சொல்வது, இந்த உணர்வுகளை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது நளன்.

இளவட்டம் said...

நல்லா இருக்கு நளன்!

மண்குதிரை said...

im nice nalan

razak said...

Rompa feel panni Eludura....