Tuesday, March 9, 2010

நீலப்பூக்கள்

மிகுந்து பசித்திருக்க‌
தெருமுனை உணவகமொன்றை முகர்ந்தப‌டி நகரும்
இந்த‌ மாலையில்
சற்றும் எதிர்பாத்திருக்கவேயில்லை
உன்னைப் பார்ப்பேனென்று

இந்த‌ மாலையில்
எவ்வ‌ள‌வு அழ‌காக‌ மிளிர்கின்ற‌துன் முக‌ம்
எவ்வ‌ள‌வு இத‌மாக‌ இருக்கின்ற‌து
உனது பார்வை
உனதிந்த‌ பேச்சு

கேட்ட‌படி இருக்கின்றேன்

பேசி பேசி பின்
சொற்க‌ள் தீர்ந்துபோய்
வெற்றிடம் பரவிய‌ க‌ண‌மொன்றில்
வின‌வுகின்றாய்
காரணந்தெரியாத எனது நிசப்த‌நிலைப் ப‌ற்றி.

"ப‌ண‌மேதுமில்ல
யாருகிட்டையும் கேட்க‌ தோன‌ல‌
சாப்பிட்டு ரெ‌ண்டு நாளாச்சி
ரொம்ப‌ ப‌சிக்குது
ஏதாவ‌து வாங்கித்தாயேனென்று"
எங்கோ வெறித்த‌படி தழும்பிய குரலில்
உதிர்த்த‌ எனது வார்த்தைக‌ளின் கன‌மறிந்து
உறைந்து போகின்றாய்
உணவகமொன்றிர்க்கு அழைத்துச்சென்று
க‌ண்க‌ல‌ங்கியபடி
தாய்மை பெருக‌ ஊட்டுகின்றாய்.

கரைந்து வழிந்த‌படி இருக்கின்றேன் நான்.

மெல்ல வேர்விட்டு கிளைத்து
விருட்ச‌மான‌ அந்த‌ இர‌வின் க‌ன‌வில்
ஏனோ பூக்க‌வேயில்லை
வழமையான‌ நீலப்பூக்கள்.

6 comments:

பா.ராஜாராம் said...

தூக்கி எறிந்தது நளன்.

velkannan said...

பா. ரா சொன்னதும் சரியே.,,
படித்த பின் நீண்ட மெளனத்திற்கு பின்பே மீண்டேன்
யார் நீ நண்பா ....?

கவிதன் said...

உணர்வுகளை வழி நெடுக பதியம் போட்டுச்செல்கிறது கவிதை .... அருமை நளன்!!!

Naresh Kumar said...

மிக அருமை நளன்...

கவிதையில் சொல்லும் அந்த வார்த்தையின் கனம், படித்தவுடன் உணர முடிந்தது!!!

வாழ்த்துக்கள் நளன்...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

razak said...

No wards to say.........