Tuesday, June 8, 2010

வெளிச்சங்களில் உதிரும் இரவு

மெலிதாகத் தளும்புகின்ற
தொட்டி நீரில் மின்னி மின்னி மிதக்கின்றன
சில வெண்ணிற ஒளிகள்

இந்தக் கோடைக்காலத்தில்
வழிதவறிப் பறக்கின்றன
சில மழைக்காலப் பறவைகள்

காற்றிலலைந்து
மெல்ல நில‌ம் சேர்கின்ற‌ன‌
சில‌ இற‌குக‌ள்

வெளிச்சங்களில் உதிரும் இரவைத்
தாங்கிப் பிடித்தலென்பது இயலாத காரியமென
கைவிட்டதொரு வேளையில்
படபடக்கின்றன
சில‌ வெளிர்நீலநிற வண்ணத்துப்பூச்சிகள்

ஏனோ
தவிர்க்கவே இயலாமல்
என்னில் படர்ந்துவிடுகின்றன
உனது நினைவுகள்
ஒவ்வொரு பொழுதுகளிலும்.

- ந‌ன்றி உயிரோசை

4 comments:

கவிநா... said...

romba nallaruku

Ramki... said...

Nice... Selva

cycle said...

நம்பிக்கையின் வெளிச்ச கீற்றுகளை, அதன் ஆசுவாசத்தை தேடித் பதிவு செய்கிற கவிதை. அதன் பின் உள்ள மன பதட்டத்தையும் உணரச் செய்யும் வரிகள். அழகான கவிதை.

mohammed said...

WonderFul.....

No one can write this poet more nice than this.