Thursday, January 13, 2011

காரணங்களறிதல் - 2

இவ்வேளையில்
யாரையோ எதையோ நினைத்துக்கொள்ள முயல்கிறேன்
பிடிபடவேயில்லை எதுவும்

இன்றைய வானில் ஒன்றுமேயில்லை

ஒரு சூரியன்
ஒரு நிலவு
ஒரு நட்சத்திரம்
ஒரு பறவை
ஒரு பட்டம்

எதுவுமேயில்லை.

இன்று இச்சாம்பல்நிற வானிருப்ப‌து
தெளிந்த‌ நிலையிலா இல்லை த‌னிமையிலா?

3 comments:

புபேஷ் said...

எல்லாமும் நீங்கியப்பின்னான நிலை
தெளிந்த‌ நிலையா அல்லது தனிமையா?
ரொம்ப நல்ல இருக்குங்க நளன்.
நீண்ட நாள் கழித்து உங்கள் ப்ளாக் பார்க்க நேர்ந்தது..

வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

good!

mohammed said...

What a pleasent picturing nalann.

You are flying on snows...

Heart goes some where.....
Wonderful nalann.I wish you all the best nalann.