Saturday, February 5, 2011

வ‌ழி

சாலையோரம் அடுக்கி வைத்திருந்த பழங்களை
நோக்கி நடந்த‌ பார்வையற்றவனின் கைப்பிடித்து நிறுத்தினேன்
எங்கு போக வேண்டுமென வினவியபோது
மெல்ல‌ச் சொன்னான்
ஒவ்வொரு கடையாக.
ஒவ்வொரு கடையாக.

5 comments:

Vel Kannan said...

நல்ல புரிதல் நல்ல கவிதை நளன்

பா.ராஜாராம் said...

ஒவ்வொரு கடையாக என ஒருமுறை சொல்லிக் கூட முடித்திருக்கலாம். மற்றொருமுறை சொல்லும் போது எத்தனை அதிர்வுகள்!

எட்டு வரிகளில் இவ்வளவு அதிர்வுகளை ஏற்படுத்த முடியுமா நளன்?

Gowripriya said...

நல்ல கவிதை

mohammed said...
This comment has been removed by the author.
mohammed said...

Manitha neyathin meethu Nambikai Neriya Nanbargaluku irukirathu Nalan.