Monday, May 16, 2011

விடுபடல்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
கண்டதில்லை அவர்கள் கூடி மகிழ்வோடிருந்ததை
ஒவ்வொரு முறையும்
அவ‌ள் த‌ன‌து தேவைக‌ளை முன்வைக்கையிலும்
அவ‌ன் த‌ன‌து இய‌லாமையை விவ‌ரிப்பான்
ச‌மாதான‌ங்க‌ள‌‌ற்றப் பொழுதுக‌ளில்
நீளும் ச‌ண்டைக‌ளுக்கிடையே
நானென்னை மௌன‌ங்க‌ளில் நிர‌ப்பிக்கொள்வேன்
இல்லையேல் புத்த‌க‌த்தை மூடிக்கொள்வேன்
அல்லது ச‌ன்ன‌ல் வ‌ழியே அவர்களை வெறித்திருப்பேன்
அவர்கள் எண்ணங்களெல்லாம்
அவர்களை நினைத்துதான்
இச்சிறுவனின் உணர்வுகளை பொருட்படுத்தியதேயில்லை எவரும்
சில சமயம் அவனின் நடத்தை மிருகத்தைக் காட்டிலும் மோசமானதாக இருந்திருக்கிறது
கள்ளுண்ண‌ப் பணம் கேட்டுக் கிடைக்காது
அவ‌ன் அவளை அடித்துதைக்கும் போதெல்லாம்
அவனை எதிர்க்க முடியாமல்
அவளுடன் சேர்ந்து அழுவேன்
ஏனென‌ ச‌லி‌த்துக்கொள்வேன்
நல்ல அப்பா வேண்டி
இறைவனிடன் வேண்டிக்கொள்வேன்

காற்றின் சப்தம் மட்டுமே கேட்டதொரு
முன்பனிக்காலமொன்றில்
எங்கோ வேலைக்கு செல்வதாகக் கூறி
தொலைதூரம் எங்களை விட்டுச் சென்றவன்
வெகுநாளாகியும் திரும்பவேயில்லை

அவள் அழுதாள். நான் அழவேயில்லை.

4 comments:

Ramani said...

" அவள் அழுதாள்
நான் அழவே இல்லை "
படித்து வருகிற ஞானத்தைவிட
பட்டுத் தெளியத் தெளிய வரும் ஞானம்
இப்படித்தான் ஒவ்வொன்றிலும்
விட்டு விலக்கி விடுதலையாக்கிப் போகுமோ?
மனங்கவர்ந்த பதிவு

mohammed said...

Feel the Experience.....

அருண்குமார் நடராஜன் said...

முயற்சி
--------

படிப்பில் முதல்மதிப்பெண் எடுத்தேன்
விளையாட்டில் முதல்மாணவனாக வந்தேன்
என் நண்பன் ஆச்சர்யப்பட்டான்
அவனுக்கு தெரியபோவதில்லை
என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
தினமும் நடக்கும் சண்டையில்
என்னை அவர்கள் கண்டுகொள்வதற்காக
நான் செய்யும் பிரம்மப்பிரயத்தனம் என்று

mohammed said...

It shows about so many lifes .