Sunday, April 10, 2016

........................

நீ வேறு யாருடனோ மகிழ்வுடன் இருக்கும்
புகைப்படத்தைப் பார்த்தப்பின்
குளியலறையின் வெந்நீரூற்றில்
சுமார் அரைமணி நேரம் அப்படியே நின்றிருந்தேன்

பின்வேளை
ஆவிப்படர்ந்த குளியலறைக்கண்ணாடியில்
உன் பெயரெழுதிப் பார்த்தேன்
இந்நாட்களில்
நாம் தொடர்புகொள்வதில்லை
முயல்வதுமில்லை
உனக்குள் இருக்குமோ
சுட்டு வலிக்கும் மாலை நேரத்து நினைவு
இந்த மன அழுத்தம்
இந்த கோடையில்
ஒரு சலனமுமற்று இருக்கிறாய் நீ
நானோ
உனை நீங்கும் மனவுறுதியற்று
ஒரு கிளையைப் போல உடைந்து தொங்குகிறேன்.
எப்பொழுதோ
நீங்கிய இலைகளை
மெல்ல கலைக்கிறது இந்த காற்று.

2 comments:

பூமகள் said...

கடந்துவிட்ட காதல்
வலி உணர்த்தும் தான்..
அருமை நளன். :-)

mohammed said...

பாவம் காற்றுக்கென்ன தெரியும் அவை நீங்கி விட்ட இலைகளென்று !
நன்று. வாழ்த்துக்கள் .